இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை கிண்டல் செய்த இலங்கை ரசிகர்கள் 3 பேரை கொழும்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கைக்கு எதிராக கொழும்பில் நேற்று தொடங்கிய கடைசி டெஸ்டில் இந்திய வீரர் யுவராஜ்சிங் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை. உடல்நலம் தேறிய போதிலும், ரெய்னாவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டதால் 12 வது வீரராக வெளியில் உட்கார வைக்கப்பட்டார். முதல் நாள் ஆட்டத்தின் போது யுவராஜ்சிங், இந்திய வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில் மற்றும் குளிர்பானங்களை எடுத்துக்கொண்டு சென்றார். அப்போது அவரை ஒரு பகுதியில் இருந்த இலங்கை ரசிகர்கள் வாட்டர் பாய்' என்று கூறி கேலி செய்தனர். இதனால் கோபமடைந்த யுவராஜ் அவர்களை நோக்கி ஆள்காட்டிவிரலை உயர்த்தி எச்சரித்து விட்டு சென்றார். யுவராஜ்சிங்கை கிண்டல் செய்த இலங்கை ரசிகர்கள் மீது, கொழும்பு காவல் நிலையத்தில் இந்திய அணி நிர்வாகம் புகார் செய்தது. அதேசமயம் யுவராஜ் சிங் நடந்து கொண்ட விதம், கண்டனத்துக்கு உரியது என்று ஒரு சிலர் கூறியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனிடையே யுவராஜ் சிங்கை கிண்டல் செய்த 3 பேரை கொழும்பு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
What is new? >